சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

 சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத் அணியுடன் சென்னை அணியும், பெங்களூரு அணியுடன் மும்பை அணியும் மோதியது.



15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 3 ஆட்டங்களிலும் வரிசையாக கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப்புக்கு எதிராக தோல்வியடைந்தது 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் கேப்டன் ரவீந்திர ஜடேஜா அணியை வெற்றிப்பாதைக்கு திருப்ப வேண்டிய கடும் நெருக்கடியில் உள்ளார்

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனை தொடர்ந்து  20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் எடுத்தது, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து ஆடிய சன் ரைசரஸ் அணி 17.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது

ராபின் உத்தப்பா 15 ரன்கள் அவுட்

ருதுராஜ் 16 ரன்கள் அவுட்

மொயின் அலி 48 ரன்கள் அவுட்

அம்பத்தி ராயுடு 27 ரன்கள் அவுட்

சிவம் டூபே 3 ரன்கள் அவுட்

ஜடேஜா 23 ரன்கள் அவுட்

தோனி 3 ரன்கள் அவுட்

பிராவோ 8 ரன்கள் 

ஜோர்டான் 6 ரன்கள் 

Tags

Post a Comment

0 Comments