நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக தனது முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது
ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்றைய ஆட்டத்தில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது இரண்டாவது ஆட்டத்தில் சென்னை அணி 210 ரன்கள் குவித்தும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிவெற்றி பெற்றது
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்றிருப்பது இதுவே முதல்முறையாகும் . சென்னை அணிக்கு இன்று கடும் சவால் காத்திருக்கிறது இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.