நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’ சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகிறது.
பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் கத்தார் நாட்டில் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் திரைப்படம் ஏற்கனவே குவைத் நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கத்தார் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே தமிழில் வெளியான விஷ்ணு விஷாலின் ’எஃப்ஐஆர்’ மற்றும் மலையாளத்தில் வெளியான துல்கர்சல்மானின் ’குரூப்’ ஆகிய திரைப்படங்களுக்கு குவைத் அரசு தடைவிதித்த நிலையில் தற்போது ‘பீஸ்ட்’ படத்திற்கும் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.