ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29-வது லீக் தொடரில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது.
புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. தற்போதைய ஐபிஎல் தொடரில் சென்னை அணி, 5 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 9-ம் இடத்தில் உள்ளது.
அதேபோல குஜராத் அணி, 5 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.