சென்னையில் இருந்து ஷீரடிக்கு மீண்டும் வாரந்திர ரயில்....

சென்னை - ஷீரடி வாராந்திர ரயில் சேவை ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து ஷீரடிக்குச் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.


ரயில்இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

அதில் ஏப்ரல் 13ம் தேதி முதல் வாராந்திர ரயில் சேவையாக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சாய் நகர் ஷீரடி வரை செல்லும் ரயில் சேவை தொடங்கப்படும் எனவும் 

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 10.20க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.25க்கு ஷீரடி சென்றடையும்.

அதே போல் ஷீரடியில் வெள்ளிக்கிழமை காலை 8.25 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு அடுத்தநாள் 9.30 மணிக்கு வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் ரயில்களுக்கு தற்போது அனைத்து ரயில்வே நிலையங்கள் மற்றும் ஆன்லைனிலும் முன் பதிவு செய்து கொள்ளலாம் 



Post a Comment

0 Comments