நடிகர் விஜய்யின் 66-ஆவது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கப்போகிறார் என்று தகவல் வெளியான நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 26ஆம் தேதி வெளியானது.இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.
தற்போது இந்தப்படத்திற்கு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த படத்தில் 6 சிக்ஸர்களை விளாச போவதாக சந்தோஷத்தில் போட்டுள்ள ட்வீட் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஷங்கர் தயாரித்த ‘ஈரம்’ படத்தில்தான் தமன் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அவர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்திலும் நடிகராக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் ’காஞ்சனா ,ஒஸ்தி ,எனிமி, ஈஸ்வரன், உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்