ஹோட்டலில் வைப்பது போல் சுவையாக சாம்பார் செய்வது எப்படி? டிரை பன்னி பாருங்க
தேவையான பொருட்கள்:-
துவரம் பருப்பு – தேவையான அளவு
பாசிப்பருப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் – தேவையான அளவு
தக்காளி – தேவையான அளவு
பச்சை மிளகாய் – தேவையான அளவு
சாம்பார் பொடி – 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 2
புளிக்கரைசல் – தேவையான அளவு
தேங்காய் – அரைத்தது தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
பெருங்காய தூள் – தேவையான அளவு
காய்கறி:-
கத்திரிக்காய், கேரட் ,முருங்கைக்காய், முள்ளங்கி, அவரைக்காய், வெண்டைக்காய், என எந்த காயை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இரண்டு மூன்று காய்கறிகளை சேர்த்துகூட இந்த சாம்பாரை செய்யலாம்.
தாளிக்க வேண்டிய பொருள்கள்:-
கடுகு - தேவையான அளவு
உளுந்தம் பருப்பு -தேவையான அளவு
சோம்பு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சுவையான சாம்பார் செய்வது எப்படி:-
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு துவரம் பருப்பு, பாசிபருப்பு இரண்டையும் நீரில் கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் - 2 சிறுது வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து தண்ணீர் ஊற்றி பருப்பு நன்றாக வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கி மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், போட்டு தாளிக்கவும் அடுத்து அதில் பெருங்காயத் தூள், பூண்டு,போட்டு தாளிக்கவும்.
அடுத்து நறுக்கிய சின்ன வெங்காயத்தை நன்றாக பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இறுதியாக பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்
அடுத்ததாக அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை அதில் கொட்டி நன்றாக பிரட்டி விடுங்கள் அடுத்து தேவையான அளவு உப்பு தூவிவிட்டு பிரட்டவும்
அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி புளிகரைசலை சேர்த்து மூடி வைத்து காய்கறிகள் நன்கு வேக விடுங்கள்
சாம்பார் கொதிக்கும் போது அதில் சாம்பார் தூள், மிளகாய் தூள், சேர்த்து நன்றாக மசாலா காய்கறிகளில் சேரும் வரை சிறிது கிளறி விடுங்கள்
அடுத்து இறுதியாக சாம்பார் கொதித்தவுடன் அதில் மசித்து வைத்த பருப்பை ஊற்றி ஒரு கொதி வந்ததும், சிறிது நெய் ஊற்றி,கொத்தமல்லி,கருவேப்பிலையை தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான முருங்கை காய் சாம்பார் ரெடி.
ஹோட்டலில் வைப்பது போல் சுவையாக இருக்கும் இந்த சாம்பார் வைத்து பாருங்க பிறகு வீட்டில் உள்ள அனைவரும் சொல்வார்கள் அடடே சாம்பார் நல்லா இருக்கே என்று அப்றம் என்ன சும்மா ஒருமுறை டிரை பன்னி பாருங்க
முக்கிய குறிப்பு:-
- சாம்பார் பருப்பை குக்காரில் வேகவைக்காமல் பாத்திரத்தில் வேக வைக்கவும்
- வெங்காயம் சின்ன வெங்காயம் தான் போடவேண்டும், நறுக்கியும் போடலாம், அல்லது முழுசாகவும் போடலாம்
- வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வரும் வரை வதக்கவேண்டும்
- முடிந்தவரை நீங்கள் கடையில் அரைத்து வைத்த மிளகாய் தூள் பயன்படுத்துங்கள்
- காய்கறிகள் போட்டு தண்ணீர் விட்டு சாம்பார் கொதிக்க வைக்கும் போது தேவையான அளவு மட்டும் தண்ணீர் ஊற்றுங்கள் சாம்பார் கட்டியாக இருந்தால் தான் கொஞ்சம் டேஸ்ட் வரும்