நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தநிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் கதையை அமெரிக்காவைச் சேர்ந்த கேலக்ஸி திரையரங்கம் பகிர்ந்துள்ளது என ஒரு செய்தி வலம் வருகின்றது
அதில், நகரின் பரபரப்பான பகுதியில் உள்ள கட்டிடத்தை தீவிரவாதிகள் கைப்பற்றுகின்றனர். அவர்கள் தீவிரவாதிகளின் தலைவனை விடுவிக்க கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.
இந்திய அரசு ஒரு தலைவர் தலைமையில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைக்கிறது அப்போது அவர்களுக்கு முன்னாள் RAW ஏஜென்ட் (விஜய்) தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் இருப்பது தெரிய வருகிறது. தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட பொதுமக்களை காப்பாற்ற அவரின் உதவியை நாடுகிறார்கள்.
iந்நிலையில் பயங்கரவாத அமைப்பின் தலைவரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இந்த நிலையில் விஜய் புத்திசாலி தனமாக செய்லபட்டு சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு தீவிரவாதிகளை கொல்கின்றார். இதுதான் பீஸ்ட் படத்தின் கதை அந்த தியேட்டர் தெரிவித்துள்ளது.