தினமும் ரூ.2000 சம்பளம் பிச்சை எடுக்க நீ வா என கடை உரிமையாளரை வேலைக்கு அழைத்த பிச்சைக்காரன் விடியோ

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  வெள்ளகோவில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுத்த நபர் ஒருவர் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்று பிச்சை கேட்டுள்ளார்.



அப்போது அந்தக் கடையின் உரிமையாளர் கை, கால் நல்லாதானே இருக்கு என் கடைக்கு வேலைக்கு வா சம்பளம் தருகிறேன் என கூறி உள்ளார். சம்பளம் எவ்வளவு தருவாய் என அந்த பிச்சை எடுக்கும் நபர் கேட்டதற்க்கு தினமும் 400 ரூபாய் தருகிறேன் என கூறி உள்ளார்.அதற்கு அந்த பிச்சை எடுத்த நபரோ 400 ரூபாய்க்கு நான் வேலை செய்ய வேண்டுமா? நான் ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பாதிக்கிறேன் என கூறுகின்றார்

உரிமையாளர் இப்படி ஓசியில் பணம் கொடுத்தால் நீ சம்பாதிக்க தான் செய்வாய் என கூறுகிறார்.அப்போது பிச்சை கேட்ட நபர், பிச்சை கொடுப்பதாக இருந்தால் இருக்கு என சொல்லுங்கள், இல்லை என்றால் இல்லை என சொல்லுங்கள். நீ என்னோடு பிச்சை எடுக்க வா, உனக்கு ரூ.2000 தருகிறேன் எனக்கூறியபடி அந்த பிச்சை எடுக்கும் நபர் அங்கிருந்து செல்கிறார். 

கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிய இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


வீடியோ பார்க்க:-

https://twitter.com/kovai_nazar/status/1524269997006016515/video/1

Post a Comment

0 Comments