கேஜிஎப் 1 கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இரண்டாம் பாகத்தையும் உருவாக்கினார். இந்த இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல், மாதம் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.
இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விஜய் கிரகந்தர், ”இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது ‘சலார்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். தற்போது, 30 சதவீத படப்பிடிப்புதான் நிறைவடைந்துள்ளது. சலாரை முடித்தப்பிறகு, ‘கேஜிஎஃப் 3’ வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் துவங்கவுள்ளது.
அதைபோல் படத்தை 2024-ஆம் ஆண்டு வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறி உள்ளார். ஹாலிவுட்டில் உருவாக்கப்படும் அவெஞ்சர்ஸ் பட வரிசைகளைப் போல் கே.ஜி.எஃப்பையும் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களாக உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.