ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்று பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த திரைப்படம்....
2 கைகளையும் இழந்து, நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கையை மையமாக வைத்து கன்னடத்தில் புதிய திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.
கே.எஸ்.விஸ்வாஸ், சர்வதேச புகழ் பெற்ற பாரா நீச்சல் வீரர். விஸ்வாஸ் நீச்சலில் மட்டுமின்றி டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு பிரபலம் அடைந்துள்ளார். விஸ்வாஸ் ஒரு பயிற்சி பெற்ற நடனக் கலைஞரும் கூட.29 வயதான விஸ்வாஸ் கனடா மற்றும் ஜெர்மனியில் நடந்த நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக பாராட்டுகளை பெற்றுள்ளார். விஸ்வாஸ் முறையே கனடா மற்றும் ஜெர்மனியில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்றுள்ளார்.
கன்னட இயக்குநர் ராஜ்குமார், விஸ்வாஸின் வாழ்க்கையை மையமாக வைத்து அரபி Arabbie என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் இந்த திரைப்படத்தில் விஸ்வாஸ் நீச்சல் வீரராக நடிக்கிறார். அவருக்கு பயிற்சியாளராக நடிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இயக்குநர் அணுகியுள்ளார்.படத்தின் கதையை கேட்டவுடன் அண்ணாமலைக்கு அது பிடித்து விட்டடதால் இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்த அண்ணாமலை, ஒரு ரூபாய் மட்டுமே ஊதியமாக பெற்றுக்கொண்டு நடித்து இருக்கிறார்.விரைவில் இந்தப்படம் திரைக்கு வர இருக்கிறது,