தமிழ் திரை உலகில் மோனிஷா என் மோனலிசா என்ற படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மும்தாஜ். இவர் அண்ணா நகர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள 'எச்' பிளாக் பகுதியில் வசிக்கிறார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து பணிப்பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகர், எச்.பிளாக் பகுதியில் உள்ள வீட்டில் சினிமா நடிகை மும்தாஜ் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வட மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் சில வருடங்களாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதில் ஒரு ஒருவர் நேற்று வீட்டில் இருந்து வெளியே வந்து, தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல உரிமையாளர் அனுமதிக்கவில்லை என செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றார்கள்