சென்னை அணி அம்பத்தி ராயுடு ஓய்வா ? உண்மை என்ன

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வை அறிவித்ததாக வெளியாகி வரும் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை அணியின் அம்பத்தி ராயுடு, நடப்பு ஐபிஎல் தொடரோட ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எனது கடைசி தொடர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 13 ஆண்டுகளாக இரு தலைசிறந்த அணிகளுக்காக விளையாடியது அற்புதமான தருணமாகும். சென்னை, மும்பை அணிகளுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அம்பத்தி ராயுடுவின் இந்தப் பதிவு சிறிது நேரத்திலேயே நீக்கப்பட்டு விட்டது. இதனால், அவர் ஓய்வு முடிவை திரும்பப் பெற்றாரா..? என்ற கேள்வியும் சிஎஸ்கே அணி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags

Post a Comment

0 Comments