ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல்தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.