மம்முட்டியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான ’புழு’ திரைவிமர்சனம்

நடிகர்கள் : 


மம்முட்டி, 

பார்வதி, 

அப்புன்னி சசி, 

ரமேஷ் கோட்டயம், 

நெடுமுடி வேணு

மற்றும் பலர்

இசை : 

ஜேக்ஸ் பிஜாய்




கதை:-

மனைவியை இழந்த குட்டன் போலீஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று நண்பர்களுடன் சேர்ந்து பிசினஸ் செய்து தனது மகன் கிச்சாவுடன் அப்பார்ட்மென்ட்டில் தனியாக வசித்து வருகிறார்.  பள்ளி செல்லும் ஒரே மகனை கண்டிப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் வளர்க்கிறார். இதனாலேயே தனது தந்தை மீது பயம் கலந்த வெறுப்பை காட்டுகிறான் மகன்.  தன்னை யாரோ கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்பதை உணரும் குட்டன், பார்க்கும் அத்தனை பேரையும் சந்தேகப்படுகிறார். தன்னை கொல்ல முயற்சி செய்யும் மர்ம நபரை கண்டுபிடிக்க பல முயற்சிகள் செய்கிறார். இன்னொரு பக்கம் தனது தங்கை பார்வதி வேற்று சாதி நபரை திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக அவரிடம் ஒதுங்கி இருக்கின்றார். இந்நிலையில் திடிரென தனது அண்ணன் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்டுக்கே கணவனுடன் குடி வருகிறார் பார்வதி. 

இறுதியில்  தங்கை குடும்பத்துடன் பேசினாரா? அவரை கொலைல் செய்ய முயற்ச்சி செய்தவர்கள் யார்? என்ன காரணம்  என்பதை திரில்லராக கொடுத்துள்ளார்கள்

Post a Comment

0 Comments