விடுதலை ஆன பேரறிவாளன் பறை இசை அடித்து கொண்டாட்டம் வீடியோ

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டு காலம் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முதலில் இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி சுப்ரீம கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். 

பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் கவர்னர் தாமதம் செய்தது தவறாகும். எனவே 142வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்படுகிறார். என சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டனர்

இந்த தீர்ப்பை கேட்டு விடுதலை ஆன மகிழ்ச்சியில் பறை இசை அடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Veaswarrr/status/1526819551950041090

Post a Comment

0 Comments