தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம்தான் நெஞ்சுக்கு நீதி.
நடிகர்கள்:-
உதயநிதி ஸ்டாலின்,
தன்யா ரவிச்சந்திரன்,
ஷிவானி ராஜசேகர்,
யாமினி சந்தர்
ஆரி,
சுரேஷ் சக்ரவர்த்தி,
இளவரசன்,
மயில்சாமி,
இயக்கம்:-
அருண்ராஜா காமராஜ்
இசை:-
திபு நினன் தாமஸ்
கதை:-
இந்தியில் தேசிய விருது பெற்ற ‛ஆர்ட்டிக்கல் 15’ படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி திரைப்படம்
நேர்மையாக இருக்கும் ASP விஜயராகவன் உதயநிதி ஸ்டாலின் பணிமாற்றம் செய்யப்பட்டு பொள்ளாச்சிக்கு வருகிறார். அவர் பணியேற்ற சில நாட்களில், அங்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அதில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு ஊரின் நடுவே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கவிட படுகிறார்கள்.ஒரு பெண் , என்ன ஆனார் என தெரியவில்லை.
இந்த வழக்கை விசாரணை செய்யும் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் தெரியவருகிறது. இரண்டு சிறுமிகளையும் கற்பழித்து கொலை செய்துள்ளார்கள் என்று கண்டுபிடிக்கிறார் உதயநிதி. தூக்கிலிடப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைத்ததா? மாயமான பெண் கிடைத்தாரா? என்பது தான், நெஞ்சுக்கு நீதி.