அண்ணன் தங்கை பாசத்திற்க்கு எடுத்துகாட்டாக அக்காகுருவி திரைப்படம்....திரை விமர்சனம்

நடிகர்கள்:-

மாஸ்டர் மஹீன்

பேபி திவ்யா 

வி.எஸ்.குமார்

இயக்குனர்:-

சாமி

இசை:-

இளையராஜா





கதை:-

உயிர், மிருகம், சிந்து சமவெளி, ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் சாமி ஈரானியப் படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறு ஆக்கமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.அண்ணன்-தங்கை பாசத்திற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக இந்தப் படத்தையும் நாம் சொல்லலாம்.

ஒரு ‘ஷூ’வில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.

செந்தில்குமார் தனது நோயாளியான மனைவியுடனும், பள்ளிக்குச் செல்லும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய பிள்ளைகளான பையனும், பெண்ணும் மிகுந்த பாசக்காரர்கள். ஒரு நாள் தங்கையின் ஷூ பிய்ந்துவிடுகிறது. அதைத் தைப்பதற்காகக் கடைக்குக் கொண்டு செல்கிறான் அண்ணன்.தைத்த பிறகு அந்த ஷூவுடன் வீட்டுக்கு வரும் வழியில் ஷூவை தொலைத்து விடுகின்றான்


அது, கான்வென்ட் என்பதால் ‘ஷூ’ இல்லாமல் பள்ளிக்குள் அனுமதிக்கமாட்டார்கள்.  அண்ணன், தங்கை இருவரின் பள்ளியிலும் ஷூ அணியாமல் நுழைய முடியாது என்பதால் வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள்.

அதன்படி தங்கைக்கு காலையில்தான் பள்ளி என்பதால் தங்கை காலையில் தான் பள்ளிக்குப் போகும்போது அண்ணனின் ஷூவைப் போட்டுச் செல்லலாம். மதியம் வேகம், வேகமாக வீடு திரும்பி அண்ணனிடம் ஷூவைக் கொடுக்க வேண்டும். அதன் பின்பு அண்ணன் அந்த ஷூவை அணிந்து கொண்டு தன் பள்ளிக்குச் செல்வான்.இந்தத் திட்டத்தினால் பள்ளி நேரம் முடிந்ததும் தேவா ஓடிப்போய் தங்கையிடம் இருந்து ‘ஷூ’வை வாங்கி அணிந்து கொண்டு தனது பள்ளிக்கு ஓடுகிறான். இப்படி அண்ணனும், தங்கையும் ஒரே ‘ஷூ’வை மாற்றி மாற்றி அணிந்துகொண்டு சமாளிக்கிறார்கள். இதனால் அண்ணன்காரன் தினமும் பள்ளிக்குத் தாமதமாகப் போக வேண்டியிருக்கிறது. 

இன்னொரு பக்கம் தங்கையின் தொலைந்து போன ஷூ, திரும்பவும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் புதிய ஷூ வாங்குவதற்காக உண்டியலை உடைக்கிறான் அண்ணன். ஆனால் இப்போதும் பணப் பற்றாக்குறை ஏற்படுகிறது.இந்நிலையில் ஒரு போட்டி பள்ளியில் அறிவிக்கப்படுகிறது. அந்த ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ஷூ பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இதனால் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு ஷூவைப் பரிசாக வெல்ல வேண்டும் என்று தயாராகிறார் மாஹின். ஓட்டபந்தயத்தில் ஜெயித்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘அக்கா குருவி’ படத்தின் சுவையான திரைக்கதை.

Post a Comment

0 Comments