ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது புதியதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ்

இந்த 15-வது சீசனில் முதல் முறையாக களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் வெற்றிக் கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது குஜராத் டைட்டன்ஸ்


ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி திடலில் நடைபெற்றது.இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே சேர்த்தது.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என களம் கண்ட குஜராத் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 133 ரன்களைக் குவித்து குஜராத் அணி கோப்பையை வென்றது.  ஐபிஎல்-லில் இந்தாண்டு புதிதாக அறிமுகமான குஜராத் அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியிருக்கிறது.

Tags

Post a Comment

0 Comments