ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி அதில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது
மேலும் புள்ளிப்பட்டியலில் 9-ம் இடத்தில் உள்ளது. தற்பொழுது சென்னை அணி அடுத்தடுத்து நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதேபோல் இன்று நடைபெறும் போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் முன்னேறவும் அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது.
கடந்த போட்டியில்
ஜபிஎல் போட்டியில் 46வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்தது. இதையடுத்து சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.