ரக்ஷித் ஷெட்டி
சார்லி
சங்கீதா ஸ்ரீகெரி
பாபிசிம்ஹா
இயக்குநர்
கிரண்ராஜ்
கதை:-
இது ஒரு கன்னட டப்பிங் படம் ஆகும்
சிறுவயதிலேயே விபத்தொன்றில் தன் குடும்பத்தை இழந்த ரக்ஷித் ஷெட்டி வாழ்கை மீது எந்த பிடிப்பும் இல்லாமல், தான்தோன்றித்தனமாக வேலை செய்து தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்
அவரது வாழ்வில், சார்லி என்ற பெண் நாய் நுழைகிறது. ஆரம்பத்தில் நாயிடம் கடுமை காட்டிய நாயகனின் மனதில் அன்பால் இடம் பிடிக்கிறது சார்லி.
ஒரு கட்டத்தில் சார்லிக்கு கேன்சர் இருப்பது தர்மாவிற்கு தெரிய வர இந்த கேன்சரில் இருந்து சார்லியை தர்மா காப்பாற்றினாரா இல்லையா? சார்லிக்கு பனி கட்டி என்றால் மிகவும் பிடிப்பதை பார்த்து சார்லியின் கடைசி ஆசையை நிறைவேற்ற சார்லியுடன் வட இந்தியா நோக்கி பயணிக்கும் தர்மா வழியில் பாபி சிம்ஹா உள்பட சில சிறப்பு கதாபாத்திரங்களை சந்திக்கிறார்.அதன் பின்னரானா அவரது வாழ்கை என்ன ஆனது என்பது மீதிக்கதை.