தங்கபத்திரம் விற்பனை மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்க பத்திர விற்பனை தபால் நிலையங்கள் மூலமாக நடைபெறுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 5091 ஆகும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள், மற்றும் அனைத்து துணை தபால் நிலையங்களிலும் தங்க பத்திர விற்பனை நடைபெறுகின்றது
தங்கம் பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும்.
தனிநபர் ஒரு நிதி ஆண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை வாங்கலாம்.
முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீத வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை முதலீட்டாளர் கணக்கில் செலுத்தப்படும்.
8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும்.தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பம் உடையவருக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகும்.
தேவையான ஆவணம்:-
தங்க பத்திரம் வாங்குபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்,
பான் கார்டு.
ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்,