இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சனிக்கிழமை நடத்தப்பட்ட ரேபிட் கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து ஹோட்டலில் அவர், தனிமைபடுத்தப் பட்டுள்ளதாகவும், மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பி.சி.சி.ஐ தனது டுவிட்டரில், "இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் (RAT) அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது அணி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.சி.ஐ. மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார்" என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது