விக்ரம் திரை விமர்சனம்

 நடிகர்கள்:-

கமல் ஹாசன், 

விஜய் சேதுபதி, 

பகத் பாசில் 

நரேன் 

காளிதாஸ் ஜெயராம்

சந்தானபாரதி, 

செம்பன் வினோத் ஜோஸ் (மலையாள நடிகர்) 

சூர்யா, 

ரமேஷ் திலக், 

ஜாஃபர், 

மைனா நந்தினி, 

ஷிவானி, 

மகேஸ்வரி 


ஒளிப்பதிவாளர்:-

கிரிஷ் கங்காதரன், 


இயக்கம்:-

லோகேஷ் கனகராஜ் 


இசை:-

அனிருத் ரவிச்சந்தர் 


தயாரிப்பு:-

ராஜ் கமல்



கதை:-


போதைப்பொருள் செய்வதை தொழிலாக கொண்டிருக்கும் விஜய் சேதுபதி யின் பல கோடி மதிப்பிலான சரக்கு, சீக்ரெட் ஏஜென்ட்டாக இருக்கும் கமல் ஹாசன் மகன் காளிதாஸிடம் கிடைக்கிறது. இதனை பாதுகாப்பான இடத்தில் பதுக்கி வைக்கிறார் காளிதாஸ். 

தன்னுடைய போதைப்பொருள் காளிதாஸிடம் இருப்பதை அறியும் விஜய் சேதுபதி, காளிதாஸை கொன்றுவிடுகிறார்.ஆனால், விஜய் சேதுபதிக்கு சரக்கு கிடைக்கவில்லை.தன் மகனை கொன்றதுக்காகவும், போதைப்பொருள் இனி அடுத்த தலைமுறைக்கு கிடைத்துவிட கூடாது என்பதற்காகவும், கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார். தந்தையாக களத்தில் கமல் இறங்கி துவம்சம் செய்கிறார். 

தேசிய போதைப் பொருள் தடுப்புபிரிவைச் சேர்ந்த சில காவல் அதிகாரிகள், முகமூடி அணிந்தஒரு குழுவால் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். பொதுவெளிக்கு தெரியாமல், அக்கொலைகளின் பின்னிருப்பவர்களை புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏஜென்ட் பகத் பாசில் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கிறார் காவல் துறை தலைவரான செம்பொன் வினோத்.

அந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் 2 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருளின் மூலப் பொருள் இருக்கிறது என்பதையும், அதன் பின்னணியில் விஜய் சேதுபதி இருக்கிறார் என்பதையும் தொடர்ந்து மேலும் சிலர் கொல்லப்படலாம் என்பதையும் கண்டுபிடிக்கிறார் பகத் பாசில். முகமூடி அணிந்து கொலை செய்பவர்களை அவர் நெருங்கிய போது அவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அது என்ன ?கொலைகளுக்கான காரணம், பின்னணி என்ன? கொலைகளைசெய்தவர்களின் மூளையாக செயல்பட்டது யார் என்பதையெல்லாம் பகத் பாசில் கண்டுபிடித்தனரா, இல்லையா என்பது கதை.

Post a Comment

0 Comments