சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் First Look போஸ்டர் வெளியீடு
சிவகார்த்திகேயன் நடிக்கும் ’எஸ்கே 20’ படத்தின் தலைப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் கே.வி.அனுதீப்.இயக்கத்தில் .ஸ்ரீவெங்கடேஷ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 20-வது படத்திற்க்கு பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது
இந்த படத்தில் உக்ரைனைச் சேர்ந்த மரியா ரியபோஷப்கா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் நவீன் பொலிஷெட்டி, பிரேம்ஜி அமரன், சத்யராஜ், உள்ளிட்டோர் நடித்து வருகின்றார்கள் இப்படத்திற்க்கு தமன் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் உலக உருண்டையை கையில் பிடித்தபடி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.