விஜய் சேதுபதியின் மாமனிதன் திரை விமர்சனம்

நடிகர்கள்:-

விஜய் சேதுபதி

காயத்ரி

குரு சோம சுந்தரம், 

ஷாஜிசென்,

கஞ்சா கருப்பு,

அனிகா 

மானஸ்வி, 

கேபிஏசி லலிதா, 

ஜுவெல் மேரி 

இசை:-

இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா

இயக்கம்: 

சீனுராமசாமி


கதை:-

பண்ணைபுரம் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் விஜய் சேதுபதி, மனைவி காயத்ரி மற்றும் மகன், மகளோடு வாழ்ந்து வருகிறார்.

தன்னை போல் இல்லாமல் தன் பிள்ளைகளாவது நன்றாகப் படிக்க வேண்டும் என்று எண்ணிய விஜய் சேதுபதி, தனது பிள்ளைகளைப் பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடிவெடுக்கிறார்.அதற்குஅதிக பணம் தேவைப்படும் என்பதால் ஷாஜி சென் என்ற ரியல் எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான வீட்டுமனைகளை விற்றுத் தரும் தரகு வேலையில் இறங்குகிறார். பணத்துடன் ஊரைவிட்டு ஓடுகிறார் மாதவன். விஜய் சேதுபதியை நம்பி நிலத்தின் மேல் பணம் போட்ட ஊர்க்காரர்களும் ஏமாந்துவிடுகின்றனர். நேர்மைக்கு பெயர்பெற்ற ராதாகிருஷ்ணனை ஒரே இரவில் மோசடிக்காரனாக பார்க்கின்றனர் மக்கள். இதனால் விஜய் சேதுபதி தன் முதலாளியைத் தேடி ஊரை விட்டு ஓடி விடுகிறார். விஜய் சேதுபதியை நம்பி தனியாக நிற்கும் அவரது குடும்பத்தின் நிலை என்னவானது? முதலாளியைத் தேடிச்சென்ற விஜய் சேதுபதி அவரை கண்டுபிடித்து மீண்டும் தன் குடும்பத்தோடு இணைந்தாரா? இல்லையா? என்பதே மாமனிதன் படத்தின் மீதி கதை.

Post a Comment

0 Comments