ஆர்.ஜே பாலாஜியின் வீட்ல வீட்ல விசேஷம் திரைப்பட திரைவிமர்சனம்

நடிகர்கள்:-

ஆர்.ஜே பாலாஜி

அபர்ணா பாலமுரளி 

சத்யராஜ் 

ஊர்வசி, 

விஸ்வேஷ்

புகழ்

இயக்கம்:-


தயாரிப்பு:-

போனி கபூர்



கதை:-

ஹிந்தியில் வெளிவந்த பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் தான் 'வீட்ல விசேஷம்' திரைப்படம்

ரயில்வே ஊழியராக இருக்கும் சத்யராஜ், மனைவி ஊர்வசி அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஆர்.ஜே.பாலாஜி, மற்றும் விஸ்வேஷ் 

இதில் ஆசிரியராக பணிபுரியும் ஆர் ஜே பாலாஜி அந்த பள்ளியின் நிறுவனர் மகளான அபர்ணா பாலமுரளி காதலித்து வருகிறார்.இருவரும் அவரவர் வீட்டில் காதலை சொல்லி  திருமணம் செய்து கொள்ளலாம்  என்று முடிவு செய்யும் நிலையில், ஆர்.ஜே.பாலாஜி, தனது தாய் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். 

ஆர் ஜே பாலாஜி கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயதில் ஊர்வசி கர்ப்பமாகியதை கேட்டு சற்று அதிர்ச்சியடைகிறார். பல இடங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். இதனால், அம்மா அப்பாவிடம் கடுமையாகவும் நடந்துகொள்கிறார். இந்த விஷயத்தினால், குடும்பத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுகிறது. ஊர்வசியின் கர்ப்பத்தால் ஆர்.ஜே.பாலாஜி காதலுக்கு விரிசல் ஏற்படுகிறது.

மகன்கள் மட்டுமட்டுமின்றி சமூகத்திலும் ஊர்வசி எங்கு சென்றாலும், உறவினர்கள் ஊர்வசியை தவறாக பேசுகிறார்கள். இந்த அனைத்து கஷ்டங்களையும் தாங்கி, ஊர்வசி தனது குழந்தையை பெற்றெடுத்தாரா? குடும்பத்தார் என்னவெல்லாம் செய்கிறார்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?இறுதியில் தாயின் கர்ப்பத்தை ஆர்.ஜே.பாலாஜி ஏற்றுக் கொண்டாரா? காதலி அபர்ணா பாலமுரளியுடன் இணைந்தாரா?என்பதே படத்தின் மீதி கதை..

Post a Comment

0 Comments