உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் உள்ள குர்தி பசாரில் கவுஷல் ஸ்வீட்ஸ் என்ற கடையில் தயாரிக்கப்படும் சமோச ஒன்றை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிக்கும் நபருக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்குகின்றனர். இதனால் அந்த கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சாமோசாவின் எடை 8 கிலோ. இதை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கே ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.
இது பற்றி கடையின் உரிமையாளர் சுபம் அவர்கள்:-
கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க யோசித்தபோது வந்த ஐடியாதான் இது
8 கிலோ எடைகொண்ட சமோசாவை சமோசாவை ஒற்றை ஆளாக 30 நிமிடங்களில் சாப்பிட்டி முடித்து விட்டால் பரிசு என்று அறிவித்தோம். இதனால் மக்களிடையே எங்கள் கடை மிகவும் பிரபலம் அடைந்துவிட்டது. வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=AABeCiJtSzY