நடிகர்கள்:-
அருண் விஜய்
ப்ரியா பவானி ஷங்கர்
சமுத்திரக்கனி,
போஸ் வெங்கட்,
சஞ்சீவ்,
யோகி பாபு,
ராமச்சந்திர ராஜு,
ராதிகா சரத்குமார்
ஜெயபாலன்,
தலைவாசல் விஜய்,
அம்மு அபிராமி,
ராஜேஷ்,
இமான் அண்ணாச்சி
இயக்கம்:-
ஹரி
இசை:-
ஜி.வி.பிரகாஷ் குமார்
ஸ்டண்ட் :-
அனல் அரசு
கதை:-
அருண் விஜய் – ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள யானை திரைபடம் எப்படி இருக்கு திரை விமர்சனம்:-
ராமநாதபுரத்தில் மிகவும் கௌரவமான குடும்பமாக வாழ்ந்து வருகிறது அருண் விஜயின் பி ஆர் பி குடும்பம். இவருக்கு சமுத்திரகனி, போஸ் வெங்கட், சஞ்சீவ் என மூன்று அண்ணன்கள் உள்ளனர். இவர்களுக்கும் ராமேஸ்வரத்தில் உள்ள சமுத்திரம் குடும்பத்துக்கும் இடையே பெரும் பகை உள்ளது.
பி.ஆர்.வி குடும்பத்தின் கடைசி மகனான ரவிச்சந்திரன் (அருண் விஜய்) சமுத்திரம் குடும்பத்தின் வாரிசு லிங்கம் (கேஜிஎஃப் ராமசந்திரா ராஜு) அருண் விஜய் குடும்பத்தை பழிவாங்க ஜெயிலிலிருந்து வெளியே வருகிறார்
இந்த சமயத்தில், பிஆர்வி குடும்பத்தை ஒட்டுமொத்தமாக உருக்குலையும் விதத்தில் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதில் சிக்கிக்கொள்ளும் அருண் விஜய், தனது அண்ணன்களின் கண்களுக்கு விரோதியாக தெரிய, வீட்டை விட்டு அண்ணன் சமுத்திரக்கனியால் வெளியேற்றப்படுகிறார் அருண் விஜய்.
இதன்பின், மீண்டும் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? பகையுடன் திரிந்துகொண்டிருந்த லிங்கம், பிஆர்வி குடும்பத்தை என்ன செய்தார்? அருண் விஜய் இதெல்லாம் எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை..
பிரச்சனை இல்லாமல் சமூகமாக தீர்த்துக் கொள்ள அருண் விஜய் பல்வேறு முயற்சிகளை எடுக்க அனைத்தும் தோல்வியில் முடிந்து குடும்பம் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ள அண்ணன்களுக்கு அருண் விஜய் துரோகி என கூறி அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகின்றனர். இதனையடுத்து என்னவானது? இவர்கள் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? வில்லனை எப்படி வீழ்த்தினார் என்பது தான் இந்த படத்தின் கதை.