கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளது
மேலும் அணைகளில் இருந்து தலா 25 கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரிக்கு வரும் நீரின் அளவானது 21 ஆயிரம் கன அடியில் இருந்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் இந்திய தேசிய கொடிவண்ணத்தில் மின் விளக்குகள் அலங்கரிக்கப்ட்டதால் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் இந்திய தேசிய கொடி மூவர்ணத்தில் வருகின்றது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/DDNewslive/status/1019480829033111552