பிரபுதேவாவின் மை டியர் பூதம் திரை விமர்சனம்

நடிகர்கள்:-

பிரபுதேவா, 

ரம்யா நம்பீசன் 

அஸ்வந்த் அசோக்குமார், 

பிக் பாஸ் சம்யுக்தா

கதை:-



வேற்று உலகத்தில் வாழும் பிரபுதேவா (கர்க்கிமுகி)விற்கு நீண்ட நாட்களாக குழந்தை வரம் இல்லாமல் உள்ளது. பிறகு ஒரு ஆண் குழந்தையும் அவருக்கு பிறக்கிறது, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 

ஒருநாள் மகனுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும் போது மகன்  ஒரு புத்துக்குள் சென்று ஒளிந்து கொள்ள அந்த புத்துக்குள்  தவம் இருக்கும் ஒரு முனிவரை தவறுதலாக எழுப்பி விடுகிறார் பிரபுதேவாவின் மகன். இதனால் முனிவர் பிரபுதேவாவின் மகனுக்கு அளிக்க அப்போது முனிவரிடம் மன்றாடி அந்த சாபத்தை தனக்கு அளிக்க வேண்டுகிறார் பிரபு தேவா முனிவர் பிரபுதேவாவிற்கு சாபமிட்டு பூமிக்கு அனுப்புகிறார். 

சாபத்தில் இருந்து உன்னை விடுவிக்க ஒரு மந்திரத்தை கூற வேண்டும் என்று கூறுகின்றார். பல நூற்றாண்டுகளுக்கு பிறகு பூமியில் அஸ்வந்த் கையில் பிரபு தேவா கிடைக்கிறார். ஆனால் அஸ்வந்திற்கு திக்குவாய் பிரச்சினை உள்ளது. அந்த பொம்மையில் இருந்து பூதத்தை விடுவிக்கும் சிறுவன் திருநாவுக்கரசுக்கு (மாஸ்டர் அஸ்வத்) தேவையான விஷயங்களை செய்யும் பூதமாக மாறுகிறார் பிரபுதேவா. 

மீண்டும் தனது உலகத்துக்கு சென்று மகனுடன் சேர அந்த சிறுவன்  அந்த மந்திரத்தை சொல்லி பிரபுதேவாவை விடுவித்தாரா? பிரபுதேவா அவரோடு மகனுடன் சேர்ந்தாரா? என்பது தான் மைடியர் பூதம் படத்தின் கதை. முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த மை டியர் பூதம். 

Post a Comment

0 Comments