தமிழ் திரை உலகின் டாப் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தான செயலி மற்றும் சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அருகில் உள்ள பனையூரில் இன்று நடைபெற்றது.
அதில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு என தனி சமூக வலைதள பகுதிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.மேலும் ரத்த தானத்தை ஊக்க வைக்கும் வகையில் தனியாக ரத்ததான ஆப் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளனர்.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில்:-
தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, மக்கள் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தளபதியின் உயிருக்கு உயிரான ரசிகர்கள். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் சக்தியை, மக்களுக்கு பயனுள்ள வகையில் வழிநடத்தும் விதமாக மற்றும் ஒரு முயற்சியாக இரத்ததானம் செய்ய தளபதி விஜய் குருதியகம் என்ற செயலியை (Mobile Application) உருவாக்கி இருக்கின்றோம்.
இதன் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்னார்வலர்களாக இணைத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் இரத்ததான சேவையை மக்களுக்காக வழங்க உள்ளோம். மேலும் இந்த செயலி, இரத்ததானம் கொடுக்க முன்வருபவர்கள் (Volunteers) இணைந்து கொள்ளவும்,
இரத்தம் தேவைப்படும் பயனாளர்கள் பயன்பெறவும் உறுதுணையாக செயல்படும்.விஜய் மக்கள் இயக்கம்தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் விலைமதிப்பற்ற பல உயிர்களை காக்கும் பொறுப்பை தனது ரசிகர்களான தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வழங்கி வழிநடத்த இந்த செயலி துணைநிற்கும் என்பதையும், தளபதியின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.
இத்தோடு இதே நன்னாளில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூட்யூப், இணையதள பக்கங்களையும் திறந்துள்ளோம். தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். எங்கள் பக்கத்தில் இருந்து வரும் செய்திகளே அதிகாரப்பூர்வமானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது
விஜய் மக்கள் இயக்க இணையதளம்:-
https://tvmioffl.com/
விஜய் மக்கள் இயக்க டிவிட்டர்:-
https://twitter.com/TVMIoffl?s=09
விஜய் மக்கள் இயக்க இன்ஸ்டாகிராம்:-
https://www.instagram.com/tvmioffl/?igshid=YmMyMTA2M2Y=
விஜய் மக்கள் இயக்க இரத்த தான ஆப்:-
https://play.google.com/store/apps/details?id=com.tvkb.blood
விஜய் மக்கள் இயக்க பேஸ்புக்:-
https://m.facebook.com/TVMIoffl/
விஜய் மக்கள் இயக்க யூடியூப்:-
https://www.youtube.com/channel/UCGZHc6wDJFjeNAAJhatSDXg