மாதவனின் ராகெட்ரி திரைப்படம் திரைவிமர்சனம்....

நடிகர்கள்:-

மாதவன்

சிம்ரன்

இசை:-

சாம் சி.எஸ் 


இயக்கம்:-

மாதவன்

ராக்கெட் தொழில்நுட்பத்தில், மிக மிக குறைந்த செலவில் liquid Fuel கொண்டு இயங்க கூடிய எஞ்சினை தயாரிக்க வேண்டும் என்பது நம்பி நாராயணனின்(மாதவன்) கனவாக இருக்கின்றது. இவருக்கு நாசாவில் மிகப்பெரிய சம்பளத்தில் வேலை கிடைக்கின்றது. ஆனால் இவர் இந்தியாவுக்காக தன்னுடைய உழைப்பை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்ரோவில் வேலைக்கு செல்கிறார்.

மிகக் குறைந்த விலையில் எஞ்சினை உருவாக்க குழு ஒன்றை அழைத்துக் கொண்டு அங்கு இருக்கும் விஞ்ஞானிகளுக்கே தெரியாமல் அவர்களின் யுக்தியை தெரிந்து கொண்டு வெறும் 60லட்சம் ரூபாய் செலவில் எஞ்சின் ஒன்றினை வெற்றிகரமாகத் தயாரிக்கிறார். 

இஸ்ரோவின் இயக்குநராக வர வேண்டிய நம்பி நாராயணன் விண்வெளி திட்ட ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டதாக குற்றச்சாட்டு ஒன்று அவர் மீது எழுந்தது. இந்த வழக்கின் காரணமாக கேரள போலீஸார் நம்பி நாராயணனைக் கைது செய்தனர். 

இந்த விசாரணை சிறைவாசம் என மாறி நான்கு ஆண்டுகளைக் கடந்தது. பின்னர் இவர் நிரபராதி என உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்படுகின்றார். அதன் பின்னர் மீண்டும் இஸ்ரோவில் பணியமர்த்தப்பட்ட நம்பி நாராயணன்

இந்த நிலையில் நம்பி நாராயணனுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைத்தெறியும் வகையில் இந்திய அரசு பத்ம பூஷன் பட்டத்தை இவருக்கு வழங்கி கௌரவிக்கின்றது. 

நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானியின் வாழ்க்கை துயரத்தை மையமாகக் கொண்டமைந்ததே இந்த ராக்கெட்ரி படம்.

Post a Comment

0 Comments