நடிகர் விக்ரமுக்கு என்ன ஆச்சு..மாரடைப்பா உண்மை என்ன மேலாளர் விளக்கம்

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும், நடிகர் விக்ரம் நலமுடன் இருப்பதாகவும் அவரது மேலாளர் சூர்யநாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.



நடிகர் விக்ரமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக நடிகர் விக்ரம் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் விக்ரமின் மேலாளர் சூர்யநாராயணன் விளக்கமளித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பரவி வரும் செய்தி பொய்யானது. அவர் சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments